2013 ஏப்ரல் 6,7 தேதிகளில், லண்டனில் 40-வது இலக்கிய சந்திப்பு நடந்ததையொட்டி எழுந்துள்ள சர்ச்சைகளை நாம் அறியப்பெறுகிறோம். 40-வது இலக்கிய சந்திப்பைக் குறித்து தோழர் பானுபாரதி முகப்புத்தகத்திலும், இணையதளங்களிலும் வைத்த விமர்சனங்கள், இலக்கிய சந்திப்பின் இறுதி விவாதங்களில் கவனம் பெற்ற போது, ஃபெளசர் “பானுபாரதி பெயரில் ஒளிந்துக்கொண்டு தமயந்தி எழுதுகிறார்” என்று அவதூறைச் சொல்லியுள்ளார். தோழர் பானுபாரதி இதற்கு மறுப்பாக “எனது சுயத்தை இலக்கியச் சந்திப்பில் இழிவு படுத்திய ஃபெளசரையும் இதற்கு இடம் கொடுத்த இலண்டன் இலக்கியச் சந்திப்பையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்” என்ற காணொளியை வெளியிட்டிருக்கிறார்.
பொதுவெளியில் இயங்கும் பெண்களை, அவர்கள் வைக்கும் காட்டமான கருத்துகளை முகம் கொடுக்க முடியாமல், மிக மலினமான முறையில் இப்படிப்பட்ட அவதூறுகளை சொல்வது கடைந்தெடுத்த ஆணாதிக்கம். எழுதும் பெண்களை, சொந்தமாக சிந்திக்க தெரியாத பொம்மைகள் போல, ஆண்களின் பினாமி கருத்துரைப்பாளர்களாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறை. பெண்களின் ஆளுமையை சிறுமைப்படுத்தும் வகையில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இப்படியான பொறுப்பற்ற கருத்துகளை வைப்பதை ஆணாதிக்கவாதிகள் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஃபெளசர் தோழர் பானுபாரதியை மட்டுமல்லாது, பெண் படைப்பாளிகள் எல்லோரையும் அவமதித்திருக்கிறார்.
40 வது இலக்கிய சந்திப்பில் பங்குபெற்ற படைப்பாளிகளும், பெண்ணியவாதிகளும், பொதுசபையில் இத்தகைய கருத்துகள் வைக்கப்படும்போது, ஒருகுரலாக எதிர்ப்பு தெரிவிக்காதது எமக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. ஃபெளசர் தான் சொன்ன அவதூறை திரும்ப பெற வேண்டுமெனவும், மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.
புஷ்பராணி(ஃபிரான்ஸ்)
அம்பை (இந்தியா)
நிர்மலா ராஜசிங்கம் (லண்டன்)
விஜி (ஃபிரான்ஸ்)
ப்ரீதம் சக்ரவர்த்தி(இந்தியா)
இந்திராகாந்தி அலங்காரம் (இந்தியா)
லீனா மணிமேகலை(இந்தியா)
சந்திரா(இந்தியா)
கவின்மலர்(இந்தியா)
மீனா கந்தசாமி(இந்தியா)
தர்மினி (ஃபிரான்ஸ்)
லிவிங் ஸ்மைல் வித்யா(இந்தியா)
உமா சக்தி (இந்தியா)
தோழி விங்கிடாசலம் (மலேசியா)
தமிழச்சி
தங்கபாண்டியன் (இந்தியா)
சுகிர்தராணி
(இந்தியா)
குட்டி
ரேவதி (இந்தியா)
நிர்மலா
கொற்றவை (இந்தியா)
மீனா
(இந்தியா)
நறுமுகைதேவி
(இந்தியா)
மணிமொழி
(மலேசியா)
சுவாதி
ச முகில் (இந்தியா)
தமயந்தி
நிழல் (இந்தியா)
அமுதா
(இந்தியா)
பானுபாரதி
(நோர்வே)