Warm Greetings.
Sengadal the Dead Sea happens to be the only Tamil film chosen for Indian Panorama , 2011.
This people participatory film dealing Tamil fishermen issue will be presented at IFFI, Goa (Nov 23 to Dec 3) and will be travelling to all prestigious film festivals across the world as Indian Panorama Package.
Sengadal the Dead Sea is enacted by the real fishermen and refugees from Dhanushkodi and Rameshwaram Mandapam camp. All the supporting artistes are from Kidathirukai Therukoothu team and the film captures the fragments of their simple lives beaten by three decade long ethnic war in Sri Lanka. Produced by Tholpaavai Theatres, Sengadal the Dead Sea was one of the recipients of Production Grant by Global Film Initiative (GFI) for the year 2010.
Warmly
Sengadal team
2011 ம் ஆண்டிற்கான இந்தியன் பனோரமாவிற்கு, செங்கடல் திரைப்படம் ஒரே தகுதி பெற்ற தமிழ்ப்படமாகத் தேர்வாகியுள்ளது. கோவா சர்வதேச திரைப்பட விழாவில்(ந்வம்பர் 23 - டிசம்பர் 3) பெருமையுடன் பங்குபெறும் செங்கடல் தமிழ் மீனவர்களின் வாழ்க்கையை மக்களின் பங்களிப்பைக் கொண்டே உருவாக்கப்பட்ட திரைப்படம். 2011 ஆண்டு முழுவதும் உலகமெங்கிலும் நடைபெறும் முக்கியமான சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு இந்தியன் பனோரமாவின் சார்பாக பங்குபெறும் வாய்ப்பையும் செங்கடல் இதன் மூலம் பெறுகிறது.
பல மாத சட்டப் போராட்டத்திற்குப் பிறகு சென்ஸார் தடையிலிருந்து மீண்ட செங்கடலின் இந்த வெற்றி கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ளவர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. மத்திய தணிக்கைக் குழு செங்கடலை, அதன் அரசியல் விமர்சனுங்களுக்காக பொது இடங்களில் திரையிட தடை விதித்திருந்தது. பலமாதகால சட்டப் போராட்டத்திற்குப் பின் எந்த வெட்டும் இல்லாமல் மேல்முறையீட்டு ஆணையத்தின் தலையீட்டால் 'A ' சான்றிதழை ஜூலை 20-ல் பெற்றது. அதன் பிறகு, 32ஆவது டர்பன் (தென் ஆஃபிரிக்கா) சர்வதேச திரைப் பட விழாவிலும், 35ஆவது மாண்ட்ரியல் (கனடா) உலகத் திரைப்பட விழாவிலும், 13 வது சர்வதேச மும்பை திரைப்பட விழாவிலும் சர்வதேசப் போட்டிப் பிரிவில் தேர்வு பெற்று பங்கேற்றது. இந்த மாதம் டோக்கியோவில், சிறந்த ஆசியப் பெண் திரைப்படமாக NAWFF விருது பெற்றுள்ளது .
டர்பன் திரைப்படவிழாவில் செங்கடல் படத்தை பார்த்த ஐ. நா சபையின் மனித உரிமை ஆணையாளர் திருமிகு. நவி பிள்ளை ”ராமேஸ்வரம் , தனுஷ்கோடி ஆகிய கடலோர எல்லைப் பகுதியில் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் மனித உரிமை மீறலுக்கான ஒரு சாட்சியமாக ,சமரசமற்ற குரலாக செங்கடல் ஒலிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை அரசின் தமிழினப் படுகொலைகள் மீதான ஐ. நா சபையின் மனித உரிமை ஆணையத்தின் விசாரணையோடு இந்திய மீனவர்களின் படுகொலை மீதான தலையீட்டிற்கும் ஆவன செய்வதாகவும் உறுதியளித்தார்.
தனுஷ்கோடி மீனவர்களையும், மண்டபம் அகதிகளையும் நடிகர்களாக கொண்டே செங்கடல் படமாக்கப்பட்டுள்ளது. இந்திய இலங்கை எல்லைக் கிராமமான, எப்போதும் வாழ்வும் மரணமும் கண்கட்டி விளையாடும் தனுஷ்கோடியை, இலங்கையின் முப்பதாண்டுகால இனப்போரால் சிதறடிக்கப்பட்ட அதன் எளிய மக்களின் வாழ்வுக் கூறுகளை, மிக நுணுக்கமாக கையாளுகிறது இத்திரைப்படம் . தோல்பாவை தியேட்டர்ஸ் தயாரிப்பான செங்கடல்,அமெரிக்காவின் க்ளோபல் பிலிம் இனிஷியேடிவின் (GFI) 2010 - ஆம் ஆண்டிற்கான தயாரிப்பு ஊக்குவிப்பு வெகுமதியையும் பெற்றுள்ளது.
--
நன்றி
செங்கடல் திரைப்படக் குழு