கவிதைகள் என் வெளிப்பாட்டுத் தளம். என் படைப்புகளை ஏற்றுக்கொள்வதோ, அதிலிருக்கும் அரசியலை விமர்சிப்பதோ வாசிப்பவர்களின் தெரிவு.படைப்புக்கு வெளியே என் மீதான தனிநபர் தாக்குதல்களுக்கோ அவதூறுகளுக்கோ என்னிடம் பதில்கள் இல்லை. செங்கடல் திரைப்படத்தில் நானும் ஊதியம் பெற்றுக் கொண்டு வேலை செய்யும் ஒரு தொழிலாளியே. ஷோபா சக்தி ஊதியம் கூட பெற்றுக் கொள்ளாமல் தான் செங்கடலில் திரைக்கதை, வசன இலாகாவில் வேலை செய்கிறார். படத்தில் பேட்டா பிரசினை என்பது பொய்க்கதை. மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் என்பதால் எல்லோரும் மாதச் சம்பளத்தில் தான் வேலை செய்கிறார்கள்.
இரண்டு நாள் படச் சுருளை எடுத்துக் கொண்டு ஓடிய குற்றத்தை விசாரிக்க நடந்த தகராறில், ஏற்பட்டது தான் போலீஸ், விசாரணை குழப்பம் எல்லாம். யாரும் கைது செய்யப்படவில்லை. தவறான செய்தி வெளியிட்ட தினத்தந்தி, தினமலர் விஷமிகளிடம் ஆதாரங்களை கேட்டுப் பார்த்தால் உண்மை புரியும். எந்த தார்மீகமும் இல்லாமல் சகட்டுமேனிக்கு செய்திகளை வெளியிடுபவர்களும், பரப்புபவர்களும் அந்த பொய்ச் செய்திகளை வைத்து கட்டுரை எழுதுபவர்களும் நாச சக்திகள் என்பதை தவிர என்ன சொல்ல? என்ன வக்கிரமோ , என்ன காழ்ப்போ, மனிதர்களின் கீழ்மைத் தனங்களுக்கு யார் தான் பொறுப்பேற்க முடியும்?
படம் முடிவடைந்து பார்வைக்கு வருவதற்கு முன்னே அதைப் பற்றிய அனுமானங்களும் வெட்டிப் பேச்சும் அநாகரிகமானது. அருவருப்பானது.
பிறகு என்னை காலத்துக்கும் தொடர்ந்து வரும் அவதூறு, நான் ஈழத் தமிழர்களிடம் காசு வேண்டி குறும்படம் செய்தேனென்றும், வேலைசெய்தவர்களுக்கு காசு தரவில்லையென்பதுமான செய்திகள்.. இந்த வதந்திகளை விடாமல் பரப்பி வருபவர்கள் ஆதாரத்தை தந்து நிரூபிக்காமல் பேசுவது அயோக்கியத்தனம். இதுவரை நான் எந்த ஈழத் தமிழரிடமும் காசு வாங்கியதில்லை, என்னோடு வேலை செய்தவர்களோடு ஒவ்வொரு படத்தின் பட்ஜெட்டை பகிர்ந்தே வேலை செய்திருக்கிறேன். ஆரம்ப காலத்தில் அரசு சாரா நிறுவனங்களோடு இணைந்து வேலை செய்தது உண்மை. பலிபீடம், அலைகளைக் கடந்து, பிரேக் தி ஷக்க்லஸ் என்று படங்கள் எடுத்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் ஒப்ப வில்லை என்பதால், நிறுவனங்களோடு வேலை செய்வதை நிறுத்தி விட்டேன். எடிடோரியலாக என்னை சுதந்திரமாக வேலை செய்ய அனுமதிக்கும் சூழலில் மட்டுமே என்னால் இயங்க முடியும்.
தவிர, தமிழ்க் கவிஞர் இயக்கம் மற்றும் ஈழத் தமிழர் தோழமைக் குரல், லீனா மணிமேகலை என்ற தனிநபர் சார்ந்த இயக்கங்கள் அல்ல. பொறுப்பாளர்கள் குழு, ஒருங்கிணைப்பாளர்கள் குழு, என்று ஒரு பெரிய டீம் அதற்காக வேலை செய்தது. அதில் பங்காற்றியவர்கள் ஒரு குறைந்த பட்ச அரசியல் இணைவு வேலைத் திட்டத்தின் அடிப்படையில் பணி செய்தார்கள். போராட்ட வடிவங்களின் மேல் விமர்சனம் வைப்பவர்கள் ஒட்டுமொத்த குழுவை கேள்வி கேட்க வேண்டும். குழுவின் அங்கத்தினராக நானும் அதற்கு பதில் சொல்வேன். அதை விட்டு கேலி பேசும் கையலாகாதவர்களுக்கு என் நேரத்தை வீணாக்க முடியாது.
இதைத் தவிர என் புகைப்படங்கள் பற்றியோ, என் குடும்ப விவகாரங்கள் பற்றியோ, என் நண்பர்கள் பற்றியோ ஒரு மஞ்சள் பத்திரிக்கை தரத்திற்கு ஆபாசமாக எழுதுபவர்களை என் கால் தூசுக்கு கூட கருத முடியாது.
லீனா மணிமேகலை
உங்களை நான் அதிகம் அறிந்ததில்லை! உங்கள் மீதான விமர்சனங்களை மட்டுமே அறிந்திருக்கிறேன்! ஆயினும் உங்கள் தன்னபிக்கை மற்றும் சுயமரியாதை எனக்கு பிடித்திருக்கிறது! உங்கள் அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
ReplyDelete//எந்த தார்மீகமும் இல்லாமல் சகட்டுமேனிக்கு செய்திகளை வெளியிடுபவர்களும், பரப்புபவர்களும் அந்த பொய்ச் செய்திகளை வைத்து கட்டுரை எழுதுபவர்களும் நாச சக்திகள் என்பதை தவிர என்ன சொல்ல? என்ன வக்கிரமோ , என்ன காழ்ப்போ, மனிதர்களின் கீழ்மைத் தனங்களுக்கு யார் தான் பொறுப்பேற்க முடியும்?
ReplyDeleteபடம் முடிவடைந்து பார்வைக்கு வருவதற்கு முன்னே அதைப் பற்றிய அனுமானங்களும் வெட்டிப் பேச்சும் அநாகரிகமானது. அருவருப்பானது. //
right... leena...! someone tries to provoke you.. (they've been continuing that... particularly with females..) don't give them what they want..!!!
//மஞ்சள் பத்திரிக்கை தரத்திற்கு ஆபாசமாக எழுதுபவர்களை என் கால் தூசுக்கு கூட கருத முடியாது. //
yes.. just ignore em.. and go ahead..!!!
all da best :)
சபாஷ்!
ReplyDeleteHats off to you. :)
ReplyDeleteஒரு படைப்பாளியின் அதி துக்கம் விளக்கம் தருவது.படைப்பாளியை மதிக்கும் மனதுகள் கூட இந்த விளக்கங்களை தவறாக எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்குவதும் உங்களை மாதிரியான படைப்பாளிகள் தான்.நல்ல எதிர் வினைகளை(!) கண்டுகொள்ளாமல் இருப்பதும்,படைப்பு ரீதியான விமர்சனங்களுக்கு தகுந்த முக்கியத்துவத்தைக் கொடுக்காமல் போவதும் தனிப்பட்ட விமர்சனங்கள் மட்டுமே திரும்பி பார்க்க வைக்கும் என்ற மாயையை உருவாக்குகின்றன.கல்லடி படுவதற்கு கூட குற்றவாளியாகி விடலாம்.சொல்லடிக்கு ?விளக்கம் சொல்லி வீணாய் போவது தான் மிச்சம்.சுற்றமும் நட்பும் அமைந்தது தமிழுக்கு அப்படி ஆதி திருவிளையாடல் புராணத்திலிருந்து.விடு.விலகு.
ReplyDeleteசாக்கடை பன்றிகள் உறுமுவதற்கும் அது நாராசாமாய்(த்தான்) இருப்பதற்கும் நான் பொறுப்பல்ல என்று யாராவது தன்னிலை விளக்கம் தருவார்களா என்ன?
ReplyDeleteஇவர்களால் பார்ப்பு பத்திரிக்கை தினமலம் என்று அன்போடு அழைக்கப்படும் பத்திரிக்கையில் மட்டும் இக்கிசுகிசு வந்திருந்தால் கூட அதையும் ஆதாரமாக கொண்டு கட்டுரை எழுதியிருப்பார்கள். அப்பொழுது மட்டும் கொள்கை பிடிப்பு மக்கு-இக-காரர்களுக்கு தினமலம் தனமலர் ஆகிவிடும்.
நான் பொறுப்பல்ல என்பதற்கு பதிலாக நான் நேரம் செலவழிக்க முடியாது என்பதாக வந்திருக்க வேண்டும்..
ReplyDeletegood..
ReplyDeleteதுணிவுக்கு சவால்கள் சகஜம்.. நீங்கள் எதிர் கொள்ளும் விதம் உங்கள் திறமையையும் தைரியத்தையும் தெளிவுபடுத்துகிறது லீனா.....
ReplyDeleteலீனா,
ReplyDeleteதங்களின் சுயவிவரத்தை கொச்சைப்டுத்தும் முகம் தெரியாத ஆசாமிகளிடமிருந்து தூர விலகுவதே மேல்.
இந்த முகம் தெரியாத ஆசாமிகள் எதையும் எதிர்மறையாக எழுதி , பிழைக்கும் பேர்வழிகள்.
விட்டு தள்ளுங்கள்
Good. and Go ahead as usual.
ReplyDeleteஇதுவரை உங்கள் குறும்படங்களை பார்க்கும் சந்தர்பம் கிடைக்கவில்லை. அனைத்தையும் பார்க்க ஆவல் உருவாகியுள்ளது.
விமர்சனங்களை கடந்து வெற்றி பெற வாழ்த்துகள்.
ReplyDeleteவினவு தளத்தினர் பரபரப்பிற்காக தரந்தாழ்ந்து இறங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது.
ReplyDeleteலீனா கூறியுள்ளது போல் ஏதாவது ஆதாரம் இருந்தால் தரலாமே?
இல்லாவிட்டால் எங்களுக்கு கேள்வி மட்டுமே கேட்க தெரியும் என்ற மகஇக வினரின் மேல் உள்ள குற்றச்சாட்டு உண்மையாகிவிடும்
Leena
ReplyDeleteare these allegation true?
1) you did not pay the workers
2) this film is supporting SL government's
version of the conflict
I do not find the answers in your web.
suganthy arumugam
Suganthy,
ReplyDeleteI am not the producer of the film.Producer has paid the workers so far and will do so for the future schedules as well, I hope...
Kindly wait for the film to get completed and ready for the viewers, to come to any conclusion on the film.
ungalidimirundhu andha sambavam patri vilakkam kooda yarum edhirparkavillai leena idhu ponra pirachanaikalukkellam neengal neram odhuka vendiya avasiyam illai... do your job... that will be the answer for the people who do such things...
ReplyDeletemm!
ReplyDeleteலீனா உங்கள் நிலைப்பாட்டை நான் ஆதரிக்கின்றேன்.தனிமனித விமர்சனம் செய்வது மிகவும் தரக்குறைவானது.முற்போக்கு என்று இதை நாம் எடுத்துக்கொள்ள முடியாது.ஆனாலும் இவர்களுக்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். உங்கள் பதில் மிகச்சரியாகவும் தெறிப்பாகவும் அமைந்துள்ளது.
ReplyDeleteயாழன் ஆதி
தமிழ்ப்பெண்கள்
ReplyDeleteCenter for Tamil Female Bloggers பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை
http://www.tamilpenkal.co.cc/
leena mam,
ReplyDeletedont be affired of opnions against ur work.dont mind {specalley about male domination voilent and ego oponins}against u. in tamil voilent male dominoination media atmospher when men does any common mistake or error it will be taken casual. when women does it will be cruely elobrated and exagurated because she is women.
even when women did not do any mistake also she will be criticised if a women is dare and bold. this is due to male domination ego. many of our psychatrist doctors opnions in tamil medias will alwayas be supportive to male domination and blame on women victum. many thinks these psychartist doctors theoryies are true consepets they dont know all psychartist doctors theories not true science and it contain nonsence.
so bold tamil womens should not feel shy about male domination supportive eve teasing anti women democratic arguements aganist her development.
எழுதிகொண்டே இருங்கள், வீணாப்போனவர்க்கு விளக்கமெல்லாம் கொடுத்துகொண்டு இருக்கவேண்டாம் ...!
ReplyDeleteஇது போல அவதூறு பரப்புபவர்கள் தும்மினாலும் தப்பு என்பார்கள். இவர்களைப் புறக்கணித்து கடந்து போவதே நல்லது. இவர்களுக்கு மறுப்பையும் எதிர்ப்பையும், விளக்கத்தையும் சொல்லி உங்கள் சக்தியை வீணாக்கவேண்டியதில்லை..
ReplyDeleteஇவர்களின் தனி மனித தாக்குதல் முதல் முறை அல்ல. ஏற்கனவே இது போன்ற தனி மனித தாக்குதல்களை நடத்துவது, வினவுக்கு புதிதல்ல. வினவின் இது போன்ற தனி மனித தாக்குதல்களும், எம்.எஃப் உசேன் ஓவியங்கள் தொடர்பாக விஷ்வ இந்து பரிஷத் நடத்திய தாக்குதல்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இன்று ஈழத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் மக்கல் கலை இலக்கியக் கழகம் சிறிது காலததிற்கு முன்பு வரை புலிகளை பாசிஸ்டுகள் என்று அழைத்தவர்கள் தான். இன்று ஈழத் தமிழருக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். மதவெறியர்களும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினரும் ஒரே தளத்தில் வைக்கப் பட வேண்டியவர்கள் தான். இவர்களை உதாசீனப் படுத்தி விட்டு, தாங்கள் தொடர்ந்து எழுதுங்கள் தோழர். காலம், இந்தக் கயவர்களை அடையாளம் காட்டும்.
ReplyDeleteYour uprising is inspiring. Those who name and shame you are the ones who never go beyond the brutal politics in everything. We understand and stand by you in your endeavor to bring up the inside out. What you write is your opinion inspired by others and decided by you and carry the view of typical well learned modern human being the gender being woman but same time who can understand the values, vices and virtues lying in deep beneath human souls.
ReplyDeleteVANTHANANKALAUM VAZHTHUKKALUM LEENA MANIMEKALAI
Inspiring..thairiyam thunivu endru padichiruken keatruken..ippo than parkiren...vazhthukkal...
ReplyDeleteleena mam,
ReplyDeletemale, female, or gay child and all the childrens are carried nearly 10 months and feeded by women only.
but in tamil atmospher women equality and democratic rights are frequently disturbed by violent male domination media and political arugement.
male drawn boder line and limits are forced against women equality and democrasy in tamil atmospher. in tamil atmospher women victom and her parents are not awer of voilent male domination arguement supportive tamil media arguements.
even suprime court bench jurdges opnion in kushboo case to should be question, if u can u can bring that also in ur bloug. even famous social writers like gnani also are not care about giving preference to women democrasy first.
the real justies is women democratic rights should be given first preference. but in tamil atmospher women have to fight a lot for her democartic rights.
சகோதரி..,நீங்கள் இயல்பாக இருக்கிறீர்கள்;அழகாக இருக்கிறது..!எதுவென்று கேட்கவேண்டாம்;வென்று காட்டுங்கள்;மென்று காலனைத் தின்று காட்டுங்கள் என வாழ்த்துகிறேன்..!
ReplyDelete