Sunday, January 12, 2014

கூட்டறிக்கை: சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

வெளியிடப்பட்ட தேதி - 12.ஜனவரி 2014

2014 ஜனவரி 3-4ம் தேதிகளில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத் துறையும் பெண்கள் சந்திப்பும் (சென்னை) இணைந்து நடந்திய பெண்ணிய உரையாடல்கள் அரங்கு நிகழ்ந்தேறியது. இருநாட்களும் காலை 9 மணி - மாலை 4 மணிவரை வரையறுக்கப்பட்ட பங்கேற்பாளர்களிற்காக நிகழ்ந்த அந்த அரங்கு, இருநாட்களும் மாலை 5 மணி - 6.30 மணிவரை அனைவருக்குமான பொது அரங்காக அமைக்கப்பட்டிருந்தது. பொது அரங்குக்கான அழைப்புகள் இணையங்களில் வெளியிடப்பட்டிருந்தன. அனைவரையும் அழைக்கிறோம் என அழைப்பிதழில் குறிப்புமிருந்தது.
3ம் தேதி மாலை 5 மணிக்கு பொது அரங்கு ஊடறு இணையத்தள ஆசிரியர் ரஞ்சி (சுவிஸ்) தலைமையில் நடந்தது. அப்போது அரங்கினுள் 'வெள்ளை வேன் கதைகள்' ஆவணப்படத்தின் இயக்குனர் லீனா மணிமேகலையும் ஒளிப்பதிவாளர் அரவிந்தும் படத்தொகுப்பாளர் தங்கராஜும், ஊடறு இணையத்தள ஆசிரியர் 'வெள்ளை வேன் கதைகள்' குறித்தும் இயக்குனர் குறித்தும் ஊடறு இணையத்தளத்தில் அவதூறுகளை வெளியிட்டிருக்கிறார் என்றும் ஊடறு அந்த அவதூறுகளைத் திரும்பப்பெறவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். ஓர் எதிர்ப்புத் தட்டியை இயக்குநர் வைத்துக்கொண்டு தரையில் உட்கார்ந்திருக்க மற்றைய இருவரும் துண்டறிக்கையை அரங்கில் விநியோகித்துள்ளனர். துண்டறிக்கை விநியோகிக்கப்படுவது பேராசிரியர் வீ. அரசுவால் தடுக்கப்பட்டது. ஆட்களை வைத்து கலாட்டா செய்கிறாயா எனவும் வீ. அரசு கேட்டுள்ளார். விவாதத்தின் பின்பு வீ. அரசுவே துண்டுப் பிரசுரங்களைப் பெற்று விநியோகித்துள்ளார். எனினும் வெள்ளை வேன் படக் குழுவினர் ஊடறு ஆசிரியரை நோக்கி எழுப்பிய கேள்விக்கு எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை. மாறாக . மங்கை, தனிநபர்களுக்கிடையேயான பிரச்சினை இது என்று சொல்லியுள்ளார். பொது இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட அவதூறு அறிக்கை தனிநபர் பிரச்சினை ஆகாது என படக்குழுவினர் பதிலளித்தனர். நீதி கிடைக்காததால் நாளைய அரங்கிலும் வந்து எனது கோரிக்கையை வைப்பேன் என லீனா மணிமேகலை சொல்லியிருக்கிறார்.
அன்றிரவே பேராசிரியர் வீ. அரசு தொலைபேசியில் லீனா மணிமேகலையை அழைத்து "நாளை அரங்கத்திற்கு வந்தால், செய்ய வேண்டியதை செய்வேன்" என எச்சரித்துள்ளார். அதை உடனேயே லீனா மணிமேகலை முகப்புத்தகத்தில் பதிவும் செய்துள்ளார். எனவே மறுநாள் நடந்தேறிய வன்முறை நன்கு திட்டமிடப்பட்ட வன்முறையே என எங்களால் ஊகிக்க முடிகிறது.
மறுநாள் மாலை நிகழ்ந்த பொது அரங்கில் எழுத்தாளர் பாமா அவர்கள் உரையாற்ற வந்தபோது இடையீடு செய்த லீனா மணிமேகலை தன்னுடைய நேற்றைய கோரிக்கை இந்த அரங்கால் நிராகரிக்கப்பட்டதால் அதைக் குறித்துப் பேசுவதற்கு ஐந்து நிமிடங்களைத் தனக்கு வழங்குமாறு கேட்டிருக்கிறார். அரங்கிற்குத் தலைமை வகித்துக்கொண்டிருந்த எழுத்தாளர் புதிய மாதவி அவர்களும் அரங்கு நிறைவுற்றதும் பேசுவதற்கு நேரம் தருவதாகச் சொல்லியுள்ளார். அப்போது இடையே புகுந்து 'மைக்'கைக் கைப்பற்றிக் கொண்ட வீ.அரசு, இது விளம்பரத்திற்கான உத்தி என்றும் உன்னதமான படைப்பாளிகளின் அரங்கில் லீனா மணிமேகலை தகராறு செய்கிறார் என்றும் சொல்லியுள்ளார். நான் உன்னதமற்ற படைப்பாளி என்றாலும் எனது கோரிக்கைக்குப் பதில் வேண்டும் என லீனா மணிமேகலை சொல்லியுள்ளார். அப்போது வீ. அரசு அரங்கிலிருந்த தனது மாணவர்களிடம் "இவள தூக்கி வெளியில போடுங்கடா" எனக் கட்டளையிட்டுள்ளார். தொடர்ந்து மாணவர்கள் லீனா மணிமேகலையையும் அவரது தோழர்களையும் உடல்ரீதியான வன்முறை உபயாகித்து அரங்கிலிருந்து வெளியேற்றியுள்ளார்கள். அங்கே புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த ஒருவர்        வீ. அரசுவால் அடிக்கப்பட்டு அவரது காமெராவும் அரசுவால் பிடுங்கப்பட்டது. எடுக்கப்பட்ட புகைப்படங்களை அழித்ததற்குப் பின்பாக காமெரா திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. அரங்குக்கு வெளியே வந்த வீ.அரசு "இது உங்களது இடம் நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம்" என மாணவர்களை மீண்டும் தூண்டிவிட அரங்குக்கு வெளியே இருந்த லீனா மணிமேகலையும் அவரது தோழர்களும் பல்கலைக் கழக வளாகத்திலிருந்தே மாணவர்களால் வன்முறையாக வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
பொது இலக்கிய அரங்கொன்றில் ஒருவரோ ஒரு குழுவோ இடையீடு செய்து தங்களது கோரிக்கையை வைப்பதையோ பேசுவதற்கு ஐந்து நிமிடங்கள் கேட்பதையோ ஜனநாய நெறிமுறைகளுக்கு எதிரான செயலாகவோ பொறுப்பற்ற கலாட்டாவாகவோ நாங்கள் கருதவில்லை. இத்தகைய இடையீடுகள் நமது இலக்கிய அரங்குகளிற்கு மிகப் பழக்கமானவையே. எழுப்பப்படும் கேள்விகளிற்கும் கண்டனங்களிற்கும் இடமளித்தும் பதிலளித்தும் தகுதியான இலக்கிய அரங்குகள் ஜனநாயக விழுமியங்களைப் பேணியுள்ளன. தவிரவும் அரங்கில் வீற்றிருந்த .மங்கை, சுகிர்தராணி , ரஞ்சி போன்ற ஆளுமைகள் இத்தகைய இடையீடுகளையும் கண்டனக்குரல்களையும் இலக்கிய அரங்குகளில் ஏற்கனவே எழுப்பியவர்களே. இத்தகைய ஜனநாயக மரபும் கருத்துச் சுதந்திரமும் பேராசிரியர் வீ.அரசு அவர்களால் உதாசீனம் செய்யப்பட்டிருக்கிறது. இலக்கிய அரங்குகளில் கருத்துகளிற்கு வன்முறையால் பதிலளிக்கும் மரபை அவர் தொடக்கிவைத்துள்ளார். அவரது மாணவர்களை வன்முறை அடியாட்களாக அவர் உருமாற்றியிருக்கிறார். இந்த வன்முறை நிகழ்ந்தேறியபோது அரங்கிலிருந்த முக்கியமான பெண்ணிய ஆளுமைகள் மவுனமாக இருந்து வன்முறைக்குத் துணைபோனது மிகவும் வருத்தத்திற்குரியது.
வன்முறையைத் தூண்டி நடத்திவைத்த பேராசிரியர் வீ.அரசுவையும், மவுனமாக இருந்து வன்முறைக்குத் துணைநின்றவர்களையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். நடந்தவற்றுக்குப் பொறுப்பேற்று பகிரங்க வருத்தம் தெரிவிக்க வேண்டுமென பேராசிரியர் வீ. அரசு அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம். "நீ சொல்லும் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை எனினும் அதைச் சொல்வதற்கான உனது உரிமையைக் காப்பாற்ற எனது உயிரைக் கொடுத்தும் போராடுவேன்" என்ற வால்டேயரின் சொற்களை அவர் முன்னே வைக்கிறோம்.

தோழமையுடன்

எழுத்தாளர் கோணங்கி 
முனைவர்.கே.ஏ.குணசேகரன் 
ரமேஷ் பிரேதன் – கவிஞர் 
ரேசல் வால்டேர் - மாநிலத்துணை செயலாளர் – விடுதலை சிறுத்தைகள் கட்சி 
லஷ்மி மணிவண்ணன் – கவிஞர், சிலேட் ஆசிரியர் 
லிவிங் ஸ்மைல் வித்யா – கவிஞர், நாடகவியலாளர் 
ஓவியர் விஸ்வம் 
ஓவியர் இளங்கோவன் 
ஹரிக்கிருஷ்ணன் – எழுத்தாளர், மணல்வீடு ஆசிரியர்
கருணாகரன் - கவிஞர் (இலங்கை) 
யவனிகா ஸ்ரீராம் – கவிஞர் 
யாழன் ஆதி - கவிஞர்
செல்மா ப்ரியதர்ஷன் - கவிஞர் 
ரியாஸ் குரானா - கவிஞர் (இலங்கை)
ஹெச் பீர் முகம்மது – எழுத்தாளர் 
வெளி ரங்கராஜன் – நாடகவியலாளர் 
அபிலாஷ் சந்திரன் - எழுத்தாளர் 
இந்திரா காந்தி அலங்காரம் – எழுத்தாளர் 
சாகிப்கிரான் – கவிஞர், தக்கை ஆசிரியர் 
இளங்கோ கிருஷ்ணன் – கவிஞர் 
லக்ஷ்மி சரவணக்குமார் – எழுத்தாளர் 
ஓவியர் மணிவண்ணன் 
வேல்குமார் - ஆய்வாளர் 
அகநாழிகை பொன்வாசுதேவன் – எழுத்தாளர் - பதிப்பாளர் 
மீரான் மைதீன் – எழுத்தாளர் 
ரிஷான் ஷெரீஃப் – கவிஞர் (இலங்கை) 
பழ. றிச்சர்ட் - அரசியற் செயற்பாட்டாளர் (இலங்கை) 
புதுவிசை பெரியசாமி - கவிஞர் 
பாலசுப்ரணியன் பொன்ராஜ் – எழுத்தாளர் 
தங்கராஜ் - படத்தொகுப்பாளர் 
மதியழகன் சுப்பையா – கவிஞர், திரைப்பட இயக்குநர் 
ரஃபீக் இஸ்மாயில் – திரைப்பட இணை இயக்குநர் 
அருண் தமிழ் ஸ்டூடியோ 
ஓவியர் சீனிவாசன் 
ஜெயச்சந்திரன் ஹஸ்மி - ஆவணப்பட இயக்குநர் 
சுபா தேசிகன் - பத்திரிகையாளர் 
ரேவதி - வெள்ளை மொழி 
சுஜாதா - செயற்பாட்டாளர் 
கார்த்திக் முத்துவளி – புகைப்படக் கலைஞர் 
கவின் – கவிஞர் 
சி.ஜெரால்டு - இயக்குநர் 
ஜோஷுவா ஐசக் - இணைய செயற்பாட்டாளர் – விடுதலை சிறுத்தைகள் கட்சி 
மகிழ்நன் – பத்திரிகையாளர் 
ஜயசந்திரன் ஹஸ்மி - குறும்பட இயக்குநர் 
நிரோஜன் – குறும்பட இயக்குநர் (இலங்கை)
கோபி ஷங்கர் - சிருஷ்டி மாணவர் இயக்கம் 
ஜான் மார்ஷல் - சிருஷ்டி மாணவர் இயக்கம் 
தினகரன் ரத்னசபாபதி - செயற்பாட்டாளர் 
இளங்கோ ரகுபதி - தொலைக்காட்சி இயக்குநர் 
முஷ்டாக் அஹமத் - வழக்கறிஞர் 
செந்தூரன் ஈஸ்வரநாதன் - பத்திரிகையாளர் 
பிரஸாந்தி சேகரம் - எழுத்தாளர் 
நிலவுமொழி செந்தாமரை - வழக்கறிஞர் 
அருண் பகத் - குறும்பட இயக்குநர் 
லூசிஃபர் ஜெ வயலட்- எழுத்தாளர் 
அரவிந்த் யுவராஜ் – பத்திரிகையாளர்  
ஆர்த்தி - பத்திரிகையாளர் 
இளவேனில் அ பள்ளிப்பட்டி – பதிப்பாளர் 
ஒவியர் கார்த்திக் மேகா 
இளவேனில் - பத்திரிகையாளர் 
சுந்தரலிங்கம் கண்ணன் - மீடியா 
சு.பாரதி - பத்திரிகையாளர் 
கார்த்திக் ஆனந்த் - துணை இயக்குநர் 
ஷீலா சக்திவேல் - பத்திரிகையாளர் 
கார்கி மனோகரன் – கவிஞர் 
கார்த்திகேயன் - பத்திரிகையாளர் 
ப்ரீத்தி - பத்திரிகையாளர் 
புதிய பரிதி - பத்திரிகையாளர் 
ஸ்ரீநிதி வாசுதேவன் - மாணவர் 
அன்றில் யாழினி - பள்ளி ஆசிரியர்
அருந்ததி – கவிஞர், திரைப்பட இயக்குநர் (ஃபிரான்ஸ்)
உமா ஷனிகா - செயற்பாட்டாளர் (ஜெர்மனி)
ராகவன் - செயற்பாட்டாளர் (லண்டன்)
சத்தியசீலன் நடேசன் - செயற்பாட்டாளர் (சுவிஸ்)
தர்மினி - கவிஞர்  (ஃபிரான்ஸ் )
சயந்தன் கதிர் - எழுத்தாளர் (ஸ்விஸ்)
தேவா - எழுத்தாளர் (ஜெர்மனி)
விஜி - செயற்பாட்டாளர் (ஃபிரான்ஸ்)
எம்.ஆர்.ஸ்டாலின் - செயற்பாட்டாளர்(ஃபிரான்ஸ்)
ஜீவமுரளி-எழுத்தாளர்(ஜெர்மனி )
விஜயன் - நாடகவியலாளர் (ஸ்விஸ்)
தனுஜா - செயற்பாட்டாளர்(ஸ்விஸ்)
தமயந்தி- கவிஞர் (நோர்வே)
பானுபாரதி - கவிஞர் (நோர்வே)
ஷோபாசக்தி - எழுத்தாளர் (ஃபிரான்ஸ்)
பத்மநாதன் நல்லையா - செயற்பாட்டாளர் (நார்வே)
ம.நவீன் – வல்லினம் ஆசிரியர் (மலேசியா)
மணிமொழி- வல்லினம் (மலேசியா)
சிவா பெரியண்ணன்ழி- வல்லினம் (மலேசியா)
கே.பாலமுருகன்- கவிஞர் (மலேசியா)
ஹரி ராஜலட்சுமி - எழுத்தாளர் (லண்டன்)
ஃபதீக் அசீரீரி- கவிஞர்(லண்டன்)
ராக்கி ராகவ் - ஆய்வு மாணவர் (லண்டன்)