Saturday, October 10, 2009

மூன்று புதிய கவிதைகள்

1

என் முலைகளைப் பிரித்து வைத்தவளைத்
தேடி கொண்டிருக்கிறேன்
நீ தானா அவள்
உன் இரண்டு கைகளுக்கும் வேலை வேண்டுமென்றா செய்தாய்
இல்லை வாய் கொள்ளவில்லையென்றா
இரு குன்றுகளுக்கிடையே தூளி கட்டி விளையாடுவது உன் சிறுவயது கனவு
என் பிள்ளை பால் குடிப்பது கண்டு பொறுக்காமல் தானே பாகம் பிரித்தாய்?
உன் பிள்ளைக்கு அறிவில்லை,அது பால் அல்ல, தேன் என்று வேறு சொல்கிறாய்
வாகை, சித்திரக்கனி, ஊமத்தை, தாழம்பூ, தாமரை, அல்லி, கத்திரி என்று தினம் ஒரு பெயரிட்டு அழைத்து மயக்குகிறாய்
விரட்டவும் முடியவில்லை
உன் நாக்கின் வெப்பத்திற்கு என் காம்புகள் கருவாச்சி தளிர்கள் போல துளிர்க்கின்றன.
பல் தடங்கள் இணைத்து நீ வரையும் சித்திரங்கள் பருவந்தோறும் உயிர் பெறுகின்றன
அவற்றை ஒவ்வொரு நாளும் ஒரு அகழ்வாராய்ச்சியாளன் வந்து வாங்கி செல்கிறான்.
நீ கிழித்து வைத்திருக்கும் ரவிக்கைகளை என்ன்டி செய்வது?


2

அவன் எப்படியிருப்பான்
மடிந்த வரலாற்றுப் பக்கம்
எப்படி தெரிந்துக் கொண்டாய்
அவன் எப்போதும் நிர்வாணமாய் இருந்தான்
அவன் உடல் ஒலித்ததா
ஆம்,நடுக்கடல்
என்ன
நூற்றாண்டு துயில்
உண்மையாகவா
ஆமாம், எனக்குள்ளே, என் கர்ப்பப்பை வாயில்
அவனை சுவைத்தாயா
துயரத்தின் உவர்ப்பு
எப்படி
என் நாக்கின் ரேகைகளை காணவில்லை
சரியாகச் சொல்
நான் தோற்றுப் போனேன்
பின் ஏன்
சுய அழிவு
அவனிடம் ஏதாவது பேசினாயா
இல்லை பேசவில்லை, எனக்குப் பசி
இப்போது எப்படி உணர்கிறாய்
ஒரு அம்பு போல
அவனை எப்படி கண்டுபிடித்தாய்
ஏற்கெனவே கனவில் வந்தவன்
என்ன நினைவு
கடல் புறா
ஏன் அழுகிறாய்
என்னால் மறக்க முடியவில்லை
ஏன் அழுகிறாய்
குஞ்சு முடமாக்கப் பட்டிருந்தது

3.

நீ அகன்ற
அந்தப் பொழுது
என் நிர்வாணத்தை உடைந்த கண்ணாடிக்கு வீசினேன்
காற்றின் அறைகளில் அமிலத்தை கொட்டினேன்
இருத்தலின் துண்டுகளை ஒன்று விடாமல் பொறுக்கித் தின்றேன்
கனவுகளை விற்கும் கலைஞர்களை நாடாப் புழுக்களைப் போல் வல்லாங்கச் சொல்லி நிந்தித்தேன்
கவிதைகளின் புதிர்களை உருவி நாய்களுக்கு போட்டேன்

என் எலும்புகளில் வன்மம் ஏறுகிறது
நீல கரப்பான்
கடலறைந்து பிளக்கும் காகமென் காமம்
பெருமழையில் உன் விந்து நுரைப்பைத் தேடி நீந்துகிறேன்

அகப்படு


லீனா மணிமேகலை

17 comments:

  1. உன் நாக்கின் வெப்பத்திற்கு என் காம்புகள் கருவாச்சி தளிர்கள் போல துளிர்க்கின்றன.
    பல் தடங்கள் இணைத்து நீ வரையும் சித்திரங்கள் பருவந்தோறும் உயிர் பெறுகின்றன
    அவற்றை ஒவ்வொரு நாளும் ஒரு அகழ்வாராய்ச்சியாளன் வந்து வாங்கி செல்கிறான்.//

    வரிகளில் வெப்பம் சுடுகிறது!! கலவையான ஒரு உணர்வினை உங்கள் வரிகள் ஏற்படுத்துகின்றன!!

    ReplyDelete
  2. எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்......
    படைப்புக்கு நன்றி....
    இவன், புலிமகன்(.com)

    ReplyDelete
  3. யாத்தே...

    கண்ணை கட்டுதுடா சாமீ...

    ReplyDelete
  4. லீனா..அகநாழிகையில் வாசித்தேன்..நன்றாக இருந்தது.(மணிஜி என்ற பெயரில் என் இரண்டு கவிதைகள் பிரசுரமாகி இருக்கிறது)

    ReplyDelete
  5. சியர்ஸ் என்ற என் குறும்படம் பற்றிய விமர்சனமும் அதே இதழில்...(கருத்து சொல்லவும்..நன்றி)

    ReplyDelete
  6. முதல் கவிதைப் பிடித்திருந்தது.

    ReplyDelete
  7. சிறப்பாக இருக்கிறது வார்த்தை கோவைகள் அற்புதம்

    ReplyDelete
  8. கவிதைகள் மிகவும் அருமை. ஏற்கனவே பல முறை வாசித்து விட்டேன்.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  9. mam ur poem is good, am proud about u that tamil women in tamil media whith bold speach.

    ReplyDelete
  10. mam u like women democratic right fighters should be awer of male domination supportive tamilmagazens like aval vigudan,kumudham sneakethi etc they say house hold work and cooking work as women work.
    in general tamil magazeens are male domination supportive,u should be awere and also creat awerness about male domination supportive psychartist doctors who writes in tamil medias.
    their articles are oppose to women equality.
    writer gnani is saying women smoking is awful{vakkaram} . if a man smokes is not awful?
    if smikong is a crime teasing the crime commetor because she is women is that correct?
    what is ur opnion.

    ReplyDelete
  11. இந்தக் கவிதைகளை அகநாழிகையில் பார்த்துவிட்டுத்தான் அப்படி எழுதினேன் என்’ணங்கள் பதிவில் இதைப் பற்றி என்பதை இப்பொழுது எல்லோரும் உணர்ந்திருப்பார்கள். நன்றி.

    ReplyDelete
  12. mam do u have awerness about [blank noise }assocation which boldly oppose women dress is not reason for eve teasing maledomination ego is the reason.

    ReplyDelete
  13. மூன்றாவது கவிதை அற்புதம்.உணர்ந்த வாழ்க்கை,புலப்படாத வார்த்தை.ஆனால் என் வருகை தாமதம் என்பதால் அவசியம் தொடர்வேன்.

    ReplyDelete
  14. Dear Leena,

    http://tamizharivu.wordpress.com/2009/12/11/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae/

    I request your views and comments.

    Regards

    Arivazhagan Kaivalyam

    ReplyDelete
  15. கவிதைக்கெல்லாம் யாரும் கோனார் நோட்ஸ் போடமாட்டாங்களா?

    ReplyDelete
  16. நான் வாய்விட்டு வாசித்து ரசித்த கவிதைகள் இவை.
    என் வாசிப்புக்குள் புதிய உலகத்தைத் திறந்துவிடுகிறது.
    வாழ்த்துகள் லீனா

    ReplyDelete