கடந்த இரண்டாண்டுகளில் வெளிவந்த சில நவீன கவிதைப் பிரதிகளை முன்வைத்து ஆய்வுகளையும் உரையாடல்களையும் ‘தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்’ முன்னெடுக்கிறது.
நவீன தமிழ்க் கவிதையில் உருவாகியிருக்கும் பன்மைத்துவப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தி அவற்றின்மேல் மனத்தடைகளற்ற விவாதங்களை உருவாக்குவது, நகர வேண்டிய திசைவெளி, தூரங்கள் குறித்த பிரக்ஞையைக் கண்டடைவது சாதி, இனம், மொழி, மதம் என்னும் உள்ளுர் தேசியப் பிடிமானங்களிலிருந்தும் பண்டம், சந்தை, போர், மரணம் என்னும் உலகளாவிய நெருக்கடிகளிலிருந்தும் தமிழ்க் கவிதை எதை உள்வாங்கியது எவற்றிலிருந்து விலகி நிற்கின்றது என விமர்சனப்பூர்வமாகப் பகிரங்கப்படுத்துவது தொடர்ந்து சிந்திப்பது, எழுதுவது, ஒன்றுகூடுவது, இயங்குவது என்பதான அடிப்படையில் தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தின் இன்னொரு முயற்சி இது:
இடம்: வால்பாறை
நாள்: 13-14 ஜுன் 2009, சனி ஞாயிறு
வரவேற்பு: கரிகாலன்
அரங்கத்தைத் தொடங்கி வைத்து உரை: அ. மார்க்ஸ்
அரங்கம்: கமலாதாஸ் அரங்கம்
கமலாதாஸ் எழுத்துகளும் நினைவுகளும்: மாலதி மைத்ரி
திறனாய்வுகள்:
1. சாராயக் கடை/ ரமேஷ் பிரேதன்
இளங்கோ கிருஷ்ணன்
2. நிசி அகவல்/ அய்யப்ப மாதவன்
அசதா
3. திருடர்களின் சந்தை/ யவனிகா ஸ்ரீராம்
ம. மதிவண்ணன்
4. தேர்ந்தெடுத்த கவிதைகள்/ கரிகாலன்
க. மோகனரங்கன்
5. என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்/ யூமா வாசுகி
வெ.பாபு
6. உலகின் அழகிய முதல் பெண்/ லீனா மணிமேகலை
க. பஞ்சாங்கம்
7. சூரியன் தனித்தலையும் பகல்/ தமிழ்நதி
மனோன்மணி
8.தெய்வத்தைப் புசித்தல்/ செல்மா பிரியதர்ஸன்
எச்.ஜி.ரசூல்
அரங்கம்: ராஜமார்த்தாண்டன் அரங்கம்
ராஜமார்த்தாண்டன் கவிதையும் வாழ்வும்: க. மோகனரங்கன்
1. உனக்கும் எனக்குமான சொல்/ அழகிய பெரியவன்
யாழன் ஆதி
2. எனக்கு கவிதை முகம்/ அனார்
செல்மா பிரியதர்ஸன்
3.உறுமீன்களற்ற நதி/ இசை
கரிகாலன்
4. காயசண்டிகை/ இளங்கோ கிருஷ்ணன்
இளஞ்சேரல்
5.துறவி நண்டு/ எஸ். தேன்மொழி
விஷ்ணுபுரம் சரவணன்
6. நீ எழுத மறுக்கும் எனது அழகு/ இளம்பிறை
கம்பீரன்
7. கடலுக்கு சொந்தக்காரி/ மரகதமணி
எஸ். தேன்மொழி
கருத்தாளர்கள்:
சுந்தர்காளி, பிரேம், சஃபி, ராஜன்குறை, வியாகுலன், சுகன், நட. சிவக்குமார், சுகிர்தராணி, முஜுப்பூர் ரஃமான், சாகிப்கிரான், ரவீந்திரபாரதி, மணிமுடி, யதார்த்தா ராஜன்
கவிதை வாசிப்பு:
தா.அகிலன், நிசாந்தினி, ஜீவன் பென்னி, வெயில், கணேசகுமாரன், அமுதா
ஒருங்கிணைப்பு:
செல்மா பிரியதர்ஸன் -9443461476
சுகிர்தராணி -9443445775
யாழன் ஆதி -9443104443
வித்யாசாகர் -9842209993
நிகழ்ச்சித் தொகுப்பு: லீனா மணிமேகலை
நன்றியுரை: வித்யாசாகர்
www.tamilpoets.blogspot.com
பகிர்தலுக்கு நன்றி சகோதரி.
ReplyDeleteகவிஞர் ராஜமார்த்தாண்டன் பற்றிய துயரமான செய்தியொன்று கேள்விப்பட்டேன். தகவல் உண்மையா?
ஆம் நண்பா,பெரும் அதிர்ச்சி, அடுத்த வாரம், சந்திப்பதாக இருந்து, இப்படி ஆகி விட்டது. துயரம்.
ReplyDeleteதமிழ் நவீன இலக்கியத்துக்கு சிறந்த பங்களிப்பாற்றும் உங்கள் நிகழ்ச்சி இனிதே நடைபெற வாழ்த்துகிறேன்!!
ReplyDeleteஇலக்கிய ஒன்றுகூடல் பயனுள்ள பகிர்வு!
ReplyDeleteபதிவுலகுக்கு வரவேற்கிறோம்.
பகிர்வுக்கு நன்றி. கவிதையாடல் சிறப்பாக நடந்தேற வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி தேவன்மயம், நிலாரசிகன், ஜோதிபாரதி.
ReplyDeleteவாழ்த்துகள் லீனா. "உலகின் அழகிய முதல் பெண்" கவிதை தொகுப்பு சிறப்புற வாழ்த்துகள்.
ReplyDeleteநவீனா கவிதைகள் குறித்த கலந்துரையாடல் அவசியம் தீவிரமடைய வேண்டும்.
கே.பாலமுருகன்
மலேசியா
Pl read an small feed back (gossip) about this programme in Junior VIKTAN ( Mr.Kalugu section). I really want to know is that true and who is the NAVEENA Penneiya Kavithayini???
ReplyDeleteஅவதூறுகளின் ஆயுள் ஏழுநாள்.
ReplyDeleteஒரு புலனாய்வு பத்திரிகையின் கிசுகிசுக்களுக்கெல்லாம் பதில் தேட தொடங்கினால்,நவீனமும் கவிதையும் உறுதியாக உங்கள் கண்களுக்குப் புலப்படுவது சிரமமே.