Sunday, June 21, 2009

கவிதை ஒன்றுகூடல்: உரையாடல்

நிகழ்வு 2

இடம்: AICUF அரங்கம் - சென்னை
நாள்: 26 ஜுன் 2009 வெள்ளிக்கிழமை மாலை 4-9 மணிவரை

முற்றுப் பெறாத துர்க்கனவாய், தீராத நெடுவழித் துயராய், ஈழத்தின் வரலாறு நம்மை வதைத்தபடியே கடந்துபோகிறது. மரணத்திற்கு மத்தியிலும், நிலம் அகன்றும், வாழ்ந்தும், எழுதியும் வரும் ஈழத்தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடலை தமிழக்கவிஞர்கள் இயக்கம் ஒருங்கிணைக்கிறது.

பன்முக வாசிப்பு:
பெயல் மணக்கும் பொழுது /தொகுப்பாளர்: அ.மங்கை
வ.ஐ.ச ஜெயபாலன்

எனக்கு கவிதை முகம்/ அனார்
செல்மா பிரியதர்சன்

சூரியன் தனித்தலையும் பகல்/ தமிழ்நதி
ராஜேஸ்வரி

இருள் யாழி/ திருமாவளவன்
யாழன் ஆதி

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை/ தீபச் செல்வன்
அரங்க மல்லிகா

தனிமையின் நிழற்குடை/ தா அகிலன்
சுகுணா திவாகர்

புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன/ மஜீத்
சந்திரா

நாடற்றவனின் குறிப்புகள்/ இளங்கோ
சோமிதரன்

கருத்தாளர்கள்:
அ.மார்கஸ், சுகன், கெளதம சித்தார்த்தன், தாமரை மகேந்திரன், லதா ராமகிருஷ்ணன், யூமா வாசுகி

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

Saturday, June 6, 2009

கவிதை ஒன்றுகூடல்: உரையாடல்

டந்த இரண்டாண்டுகளில் வெளிவந்த சில நவீன கவிதைப் பிரதிகளை முன்வைத்து ஆய்வுகளையும் உரையாடல்களையும் ‘தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்’ முன்னெடுக்கிறது.

நவீன தமிழ்க் கவிதையில் உருவாகியிருக்கும் பன்மைத்துவப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தி அவற்றின்மேல் மனத்தடைகளற்ற விவாதங்களை உருவாக்குவது, நகர வேண்டிய திசைவெளி, தூரங்கள் குறித்த பிரக்ஞையைக் கண்டடைவது சாதி, இனம், மொழி, மதம் என்னும் உள்ளுர் தேசியப் பிடிமானங்களிலிருந்தும் பண்டம், சந்தை, போர், மரணம் என்னும் உலகளாவிய நெருக்கடிகளிலிருந்தும் தமிழ்க் கவிதை எதை உள்வாங்கியது எவற்றிலிருந்து விலகி நிற்கின்றது என விமர்சனப்பூர்வமாகப் பகிரங்கப்படுத்துவது தொடர்ந்து சிந்திப்பது, எழுதுவது, ஒன்றுகூடுவது, இயங்குவது என்பதான அடிப்படையில் தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தின் இன்னொரு முயற்சி இது:

இடம்: வால்பாறை
நாள்: 13-14 ஜுன் 2009, சனி ஞாயிறு

வரவேற்பு: கரிகாலன்
அரங்கத்தைத் தொடங்கி வைத்து உரை: அ. மார்க்ஸ்

அரங்கம்: கமலாதாஸ் அரங்கம்
கமலாதாஸ் எழுத்துகளும் நினைவுகளும்: மாலதி மைத்ரி

திறனாய்வுகள்:
1. சாராயக் கடை/ ரமேஷ் பிரேதன்
இளங்கோ கிருஷ்ணன்

2. நிசி அகவல்/ அய்யப்ப மாதவன்
அசதா

3. திருடர்களின் சந்தை/ யவனிகா ஸ்ரீராம்
ம. மதிவண்ணன்

4. தேர்ந்தெடுத்த கவிதைகள்/ கரிகாலன்
க. மோகனரங்கன்

5. என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்/ யூமா வாசுகி
வெ.பாபு

6. உலகின் அழகிய முதல் பெண்/ லீனா மணிமேகலை
க. பஞ்சாங்கம்

7. சூரியன் தனித்தலையும் பகல்/ தமிழ்நதி
மனோன்மணி

8.தெய்வத்தைப் புசித்தல்/ செல்மா பிரியதர்ஸன்
எச்.ஜி.ரசூல்

அரங்கம்: ராஜமார்த்தாண்டன் அரங்கம்
ராஜமார்த்தாண்டன் கவிதையும் வாழ்வும்: க. மோகனரங்கன்

1. உனக்கும் எனக்குமான சொல்/ அழகிய பெரியவன்
யாழன் ஆதி

2. எனக்கு கவிதை முகம்/ அனார்
செல்மா பிரியதர்ஸன்

3.உறுமீன்களற்ற நதி/ இசை
கரிகாலன்

4. காயசண்டிகை/ இளங்கோ கிருஷ்ணன்
இளஞ்சேரல்

5.துறவி நண்டு/ எஸ். தேன்மொழி
விஷ்ணுபுரம் சரவணன்

6. நீ எழுத மறுக்கும் எனது அழகு/ இளம்பிறை
கம்பீரன்

7. கடலுக்கு சொந்தக்காரி/ மரகதமணி
எஸ். தேன்மொழி

கருத்தாளர்கள்:
சுந்தர்காளி, பிரேம், சஃபி, ராஜன்குறை, வியாகுலன், சுகன், நட. சிவக்குமார், சுகிர்தராணி, முஜுப்பூர் ரஃமான், சாகிப்கிரான், ரவீந்திரபாரதி, மணிமுடி, யதார்த்தா ராஜன்

கவிதை வாசிப்பு:
தா.அகிலன், நிசாந்தினி, ஜீவன் பென்னி, வெயில், கணேசகுமாரன், அமுதா

ஒருங்கிணைப்பு:
செல்மா பிரியதர்ஸன் -9443461476
சுகிர்தராணி -9443445775
யாழன் ஆதி -9443104443
வித்யாசாகர் -9842209993

நிகழ்ச்சித் தொகுப்பு: லீனா மணிமேகலை
நன்றியுரை: வித்யாசாகர்

www.tamilpoets.blogspot.com