Friday, January 24, 2014

லீனா மணிமேகலையின் இயக்கத்தில் ‘வெள்ளை வேன் கதைகள்’

ஆவணப் பட விமர்சனம்                                                                           

வெளி ரங்கராஜன்

நன்றி : தமிழ் ஹிண்டுஇலங்கையில் மக்களின் சகஜ வாழ்க்கை என்பது கடந்த பல ஆண்டுகளாக போராளி இயக்கங்களாலும், அரசு பயங்கரவாதத்தாலும் பல்வேறு விதமாக சீர்குலைந்துள்ளது. அப்பா, மகன் கணவன், சகோதரன் என தங்கள் பிரியமானவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்கள் ஏராளம்சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள், இயக்கத்தால் வலுக்கட்டாயமாக போராளிகளாக்கப் பட்டவர்கள், இயக்கப் போராளிகளாக ராணுவத்திடம் சரணடைந்தவர்கள், பத்திரிகையாளர்கள், கார்ட்டூனிஸ்டுகள் பாதிரியார்கள், மௌலாவிகள், கலைஞர்கள். கேள்வி கேட்பவர்கள் என எண்ணற்றோர் காணாமல் போகடிக்கப் பட்டிருக்கிறார்கள். தங்கள் அன்பானவர்களுக்கு என்ன ஆயிற்று என்றே தெரியாமல் பீதியிலும், அவநம்பிக்கையிலும் வாழ்நாளைக் கழிக்கும் பெண்களின் சோகங்கள் விவரிக்க முடியாதவைஒரு கட்டத்தில் இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலையில் அவர்கள் நீதிகேட்டு வீதிக்கு வந்து போராடத் துணிந்துவிட்டார்கள்ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை யாழ்ப்பாணத்துக்கும், கொழும்புவுக்கும் விஜயம் செய்தபோது அவர் முன்னால் ஒரு மிகப்பெரிய ஊர்வலத்தை நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்கள். அதில் பங்கு பெற்ற குடும்பங்களை தனித்தனியாக பேட்டி கண்டு அந்த விவரிப்பில் உருவானது தான் இந்த ஆவணப்படம்.

            இரணபாலை பகுதியைச் சேர்ந்த ஜெயா லங்காரத்னம் என்பவரின் போராளி மகன் ராணுவத்திடம் சரணடைந்த பிறகு இன்னும் வீடு திரும்பவில்லைதிரிகோணமலையில் லக்‌ஷயா என்பவரின் தந்தை விசாரணைக்காக நடுஇரவில் வீட்டிலிருந்து வெள்ளை வேனில் அழைத்துச் செல்லப்பட்டவர்புத்தளம் பகுதியில் ரசியா என்பவரின் கணவரான ஷகீல், ஒரு மௌலாவியான இவர் காணாமல் போயிருக்கிறார்கிளிநொச்சியில் சந்திராவின் இளம் வயது மகள் புலிகளால் பயிற்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின் காணாமல் போனவர்ஹோமாகமாவில் சந்தியாவின் கணவர் அரசியல் கார்ட்டூனிஸ்டான ப்ரகீத் கடத்திச் செல்லப்பட்டு பறிகொடுத்தவர். மன்னாரில் போராளியான வெற்றிச் செல்வி தன்னுடைய சகபோராளிகளை தேடிக் கொண்டிருக்கிறார். ஹம்பன்தோடாவில் 1980-களில் ஜே.வி.பி நடத்திய கொரில்லா கலகத்தில் தன்னுடைய தந்தையை காணாமல் தவிக்கும் மகள் அஷீலா தன் தந்தையின் அரசியல் அறிவைப் பகிர்கிறார்அரசு பயங்கரவாதத்தின் சின்னமான இந்த வெள்ளை வேன் கொடூரம் இலங்கையின் வடக்கு, கிழக்கு, தெற்கு என எல்லாப்பகுதிகளிலும் ஊடுருவியுள்ளது.

            ராணுவக் கண்காணிப்புகளைக் கடந்து பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று அவர்களுடனேயே தங்கியிருந்து அவர்களுடைய சூழல் பின்புலத்துடன் இது படமாக்கப்பட்டுள்ளது. இழந்து போன உறவுகளின் நினைவுகளுடன் கடுமையான வாழ்க்கை யதார்த்தத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் இவர்கள் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் வாழ்க்கையை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்அவர்களுடைய இழப்பின் அவலங்கள் இனி போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு அவர்களை தள்ளியுள்ளனவீதிக்கு வந்துள்ள அவர்களது கதறல் நிராகரிக்க முடியாத அளவு ஒரு மாபெரும் தேசிய உரு எடுத்துள்ளது.

            இது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் நவதீதம்பிள்ளை, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட்காமரூன் ஆகியோரையும் பாதித்து உறுதியான நிலைப்பாட்டுக்கு அவர்களை தள்ளியுள்ளதுஅதன் அரிய கணங்களை இப்படம் பதிவு செய்துள்ளது. இலங்கையின் போர்க்குற்ற விசாரனை கோரிக்கைகளுக்கு வலுவான ஆதாரமாக உள்ள இப்படம் மிகையின்றி இயல்பான நம்பகத்தன்மையுடனும், ஒலி அதிர்வுகளுடனும் மனதை பாதிக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது. சானல் 4-ல் பகுதியாக காட்டப்பட்ட இப்படம் வரும் மார்ச்சில் நடைபெற இருக்கும் ஜெனிவா சந்திப்பில் திரையிடப்பட உள்ளது.

            ஆனால் இலங்கைச் சூழல் சிக்கல்தன்மை கொண்டதாகவே உள்ளதுஎதிர்ப்பு குரல்கள் வேறுபட்ட நிலைப்பாடுகளுடன் சிதறுண்டு உள்ளனகளப்பணியாளர்களின்  செயல்பாடுகள், அவர்களின் நிலைப்பாடுகள் குறித்த அவநம்பிக்கைகளுடனேயே எதிர்கொள்ளப்படுகின்றனதங்களுக்கு எதிரான அனுமானங்களை படைப்பின் நேர்மை கொண்டே அவர்கள் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. அவ்வகையில் இலங்கையின் அரசு பயங்கரவாதத்துக்கு வலுவான ஆதாரமாக அமைந்துள்ளது இப்படம்.